உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் குடும்பத்தில் ஒருவராக கருதப்பட்ட பிரியமான நாயின் மரணமடைந்ததால் அதற்கான 13-ம் நாள் காரியத்தை விமரிசையாக கொண்டாடிய சம்பவம் ஒன்றில் நேற்று நடந்துள்ளது.
முசாபர்நகரில் உள்ள அல்மாஸ்பூர் கிராமத்தில் டாக்டர் பிரம்மதுத் சைனியின் குடும்பத்தில் ஒருவராகவே வாழ்ந்துவந்தது கலு எனும் நாய். குடும்பத்தினரின் பிரியமான இந்த செல்ல நாய் திடீரென நோய்வாய்ப்பட்டது. இதனால் சில வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தது.
இதனை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பிரம்மதுத் சைனியின் குடும்பத்தினர் பெரும் துக்கத்திற்கு ஆளாயினர். தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம் போலவே அவர்களை கலுவின் மரணம் மிகவும் பாதித்தது. இதனால் கலுவின் பிரிவை சடங்குகளின் மூலம் புனித விழாவாக அனுசரிப்பதென முடிவு செய்து 1100க்கும் மேற்பட்டவர்களுக்கு கறுப்பு நிறத்தில் கருமக் காரியப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
நேற்று நிகழ்வின்போது கலந்துகொண்ட 1100க்கும் மேலான நண்பர்களும் உறவினர்களும் ஒப்பீட்டளவில் இலகுவான மனநிலையில் இருப்பதாகத் தோன்றினாலும், டாக்டர் பிரம்மதுத் சைனியின் குடும்பம் மிகுந்த துக்கத்திலேயே இருந்தனர்.
இதுகுறித்து டாக்டர் சைனி கூறுகையில், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு முன்புதான் தெருவிலிருந்து கண்டெடுத்து இந்த நாயை நான் வீட்டுக்கு அழைத்து வந்தேன். நான் கலுவை வீட்டிற்கு அழைத்து வந்த நேரத்தில் நான் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போதுன் கலு என் வீட்டுக்குள் நுழைந்தார். கலு வந்த நாள் முதல், எங்களது எல்லா பிரச்சினைகளும் பனி உருகுவது போல் கரைந்தோடியது. எங்களைப் பொறுத்தவரை கலு எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என்றார்.
கலு டாக்டர் பிரம்மதுத் சைனியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், "அவர் ஒரு நாய் மட்டுமல்ல, நெருங்கிய குடும்ப உறுப்பினரும் ஆவார், நாங்கள் ஒரு குடும்ப உறுப்பினருக்காக நாங்கள் செய்த அனைத்தையும் செய்கிறோம், கலு சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, கலு இறப்பதற்கு முன்பு பல வாரங்களாக முசாபர்நகரில் உள்ள ஒரு கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தது, முக்கியமாக வயது தொடர்பான வியாதிகள் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தது. சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கலுவை காட்டில் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்தேம். அதற்கு 13ஆம் நாள் காரியமாக ‘தெஹ்ரவீன்’ முன் ஒரு ‘ஹவன்’ நடத்துவதெனவும் முடிவு செய்து நண்பர்கள், உறவினர்களுக்கு கறுப்புநிற அட்டையிலான அழைப்பிதழை விநியோகித்தோம்.
இவ்வாறு டாக்டர் பிரம்மதுத் சைனியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தெரிவித்தார்.