தேயிலைப் பறிப்பதனால் ஏற்படும் ரத்தசோகையிலிருந்து பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை நோயிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகில இந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் டூவர்ஸ் அமைப்புக் கிளையின் 142 வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் நயன்தாரா பால்சவுத்ரி கூறியதாவது:
தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் போதுதான் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும்.
சமீபத்திய ஆய்வில் தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் பெண் தொழிலாளர்கள் பலருக்கு ரத்த சோகையால் ஏற்பட்டு கடும் பாதிப்புக்குள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களை நோயிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சானிட்டரி நாப்கின்களை வழங்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சுகாதார வசதிகள் செய்து தரப்படுகின்றன. முக்கியமாக குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்திய நலத் திட்டங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் சம்பளம் மற்றும் போனஸ் வழங்கல் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. அதற்காக அவர்களிடம் ஆதார் அட்டைகள் இருக்கின்றன. அவர்களுக்கு தங்குமிடம், சுகாதாரம், நீர் மற்றும் கல்வி வசதிகளை தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனரா என்பதையும் சங்கம் ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
நயன்தாரா பால்சவுத்ரி தெரிவித்தார்.