இந்தியா

திருமண அழைப்பிதழில் சிஏஏ ஆதரவு வாசகம் அச்சிட்ட ம.பி. மணமகன்

செய்திப்பிரிவு

மத்தியபிரதேசத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவான ஒரு வாசகத்தை தனது திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டம் கரேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாத் கார்வால். சிஏஏ-வுக்கு எதிராக நடக்கும் வன்முறை போராட்டங்களால் மிகுந்த வருத்தம் அடைந்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது திருமண அழைப்பிதழில் ‘சிஏஏ-வை நான் ஆதரிக்கிறேன் (I support CAA)’ என்ற வாசகத்தை அச்சிட்டு, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பிரபாத் கார்வால் கூறும்போது, “மக்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என நான் நம்புவதால் இவ்வாறு அச்சிட்டேன். இந்த சட்டம் பற்றி சரியான விழிப்புணர்வை இது ஏற்படுத்தும் என நம்புகிறேன். எனது திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் இந்த சட்டம் பற்றி சந்தேகம் எழுப்பினால் அதனை நான் போக்குவேன். சரியான உண்மைகளை அவர்களிடம் விளக்குவேன்” என்றார்.

SCROLL FOR NEXT