இந்தியா

திருமலையில் விடுதி வசதி: தேவஸ்தான அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

செய்திப்பிரிவு

திருமலையில் பணியாற்றும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு, திருமலையில் விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போலீஸ், போக்குவரத்து, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட முக்கியமான 44 துறைகளுக்கு மொத்தம் 652 விடுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு தினமும் ரூ. 30 வீதம் வாடகை வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் பல முறை ஆலோசனை நடத்தப்பட்டது. அவரது அறிவுரையின்பேரில் கூடுதல் நிர்வாக அதிகாரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் தேவையில்லாத விடுதிகளை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க நேற்று முன்வந்தனர். இந்த விடுதிகள் இனிமேல் பக்தர்களுக்காக ஒதுக்கப்படும்.

மீதமுள்ள விடுதிகளுக்கு கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, விடுதிகளில் தங்கியுள்ள அதிகாரிகள் அதற்கான மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும். வாடகையும் விரைவில் உயர்த்தப்படும். அதிகாரி மாற்றலானாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ உடனடியாக அறையை காலி செய்ய வேண்டும். திருப்பதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு திருமலையில் அறைகள். இந்த நடவடிக்கையால் பக்தர்களுக்கு கூடுதலாக அறைகளை ஒதுக்க முடியும் என தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். என். மகேஷ்குமார்

SCROLL FOR NEXT