இந்தியா

பிரதமர் மோடியுடன் சீன பிரதமர் தொலைபேசியில் பேச்சு

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து சீன பிரதமர் லீ கீகியாங் உரையாடினார்.

சீன பிரதமர் லீ கீகியாங் இன்று மதியம் 1.15 மணியளவில் மோடியை அழைத்து உரையாடினார். அதில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியாவுடன் உறுதியான உறவை வைத்துக்கொள்ள சீனா விரும்புகிறது என்று கூறினார்.

மோடியும் இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் சீனாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவைப் பேண இந்தியா விரும்புகிறது என்றும், சீனாவுடன் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காணப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்.

உரையாடலின்போது, சீன அதிபர் ஸீ ஜின்பிங்-கும் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சீன அதிபர் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT