இந்தியா

நிர்பயா வழக்கின் மரண தண்டனைக் குற்றவாளியின் கருணை மனு: குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது உள்துறை அமைச்சகம்

பிடிஐ

நிர்பயா வழக்கின் மரண தண்டனைக் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரின் கருணை மனுவினை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது, அதில் கருணை மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வரும் மரண தண்டனை நிறைவேற்ற தாமத விவகாரத்தில் குற்றவாளி முகேஷ் சிங் தன் கருணை மனுவை சிலநாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தார்.

“உள்துறை அமைச்சகம் கருணை மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கருணமனுவை நிராகரிக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் முகேஷ் சிங்கின் இந்தக் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு வியாழனன்று அனுப்பியது.

முகேஷ் சிங்கின் கருணை மனுவினால் டெல்லி நீதிமன்றம் ஜன.22ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்கக் கோரியது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் உள்துறை அமைச்சகம் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவரிடம் அனுப்பி, நிராகரிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

SCROLL FOR NEXT