நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி அவர்களை சந்தித்து அறிவுரைகளை கூறி வருகிறார்.
அந்த வகையில், நிகழாண்டுக்கான இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர். - பிடிஐ