மேற்குவங்க பாஜக தலைவராக திலீப் கோஷை கட்சி மேலிடம் கடந்த 2015-ம் ஆண்டு நியமித்தது. அவரது பதவிக் காலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும், கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அவர் மாநில கட்சித் தலைவராக நீடித்தார்.
இந்நிலையில், மேற்குவங்க பாஜக கமிட்டிக் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தலைவராக திலீப் கோஷ் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் 3 ஆண்டுகள் மாநில கட்சித் தலைவர் பதவி வகிப்பார்.
இதுகுறித்து திலீப் கோஷ் கூறும்போது, ‘‘வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார். - பிடிஐ