இந்தியா

சுரங்க ஊழல் வழக்கு: நிலக்கரி அமைச்சக முன்னாள் செயலருக்கு ஜாமீன்

பிடிஐ

மத்திய பிரதேச மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்திருக்கும் ஊழல் தொடர்பாக அந்த வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எச்.சி.குப்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அதே வழக்கில், 'புஷ்ப் ஸ்டீல்ஸ் அண்ட் மைனிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் இயக்குநர் அதுல் ஜெயினுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள பிரம்மபுரி பகுதியில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு குப்தா மற்றும் அதுல் ஜெயின் ஆகியோர்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதால் ஜாமீன் வழங்கலாம் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT