சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தனது ட்வீட்டில் கோவாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் “சிஏஏ, என்ஆர்சி எதிராக சுவாமி விவேகானந்தர்” என்ற ஹேஷ்டேக்கை இணைத்ததால் கிண்டலுக்கு ஆளானார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை நினைவுகூரும் அவரது வாசகங்கள் பெருமளவில் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.
அதேநேரம் சிஏஏ எதிர்ப்பாளர்களும் விவேகானந்தர் சிஏஏவுக்கு எதிரானவர் என்பதைக் குறிப்பிட்டு சிஏஏ, என்ஆர்சி மற்றும் இந்துத்துவாவுக்கு எதிராக விவேகானந்தர் என்பதைக் குறிக்கும் ஹேஷ்டேக்குகளை இணைத்திருந்தனர்.
கோவாவைச் சேர்ந்த பாஜக பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நரேந்திர சவாய்கர் தனது ட்வீட்டில் சுவாமி விவேகானந்தரின் வாசகங்களை வெளியிட்டவர், தவறுதலாக சிஏஏ எதிர்ப்பாளர்களின் ஹேஷ்டேக்குகளை இணைத்தது சமூக வலைதளத்தில் கடும் கிண்டலுக்குள்ளாகி அது வைரலானபின் அதனை நீக்கிவிட்டார்.
சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்பு வாய்ந்த 1893 சிகாகோ உரையை மேற்கோள் காட்டிய சவாய்கர், ''துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் அனைத்து மதங்களுக்கும் மற்றும் பூமியின் அனைத்து நாடுகளைச்சேர்ந்த அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்'' என்ற வாசகத்தை விவேகானந்தர் படத்துடன் வெளியிட்டிருந்தார். இந்த ஹேஷ்டேக்குகளை சிஏஏவுக்கு எதிராக சிலர் ட்வீட் செய்து இருந்தனர். பாஜகவைச் சேரந்தவர் இந்த ஹேஷ்டேக்குகளை இணைத்தது பலரது விமர்சனத்துக்கு உட்பட்டதோடு ட்வீட் வைரலாகவும் வழிவகுத்தது.
அவரது ட்வீட் வைரலாகி சில நிமிடங்களுக்குப் பிறகு, சவாய்கர் இந்த பதிவை நீக்கிவிட்டார், இது ஒரு "தவறுதலாக பதிவாகிவிட்டது" என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், சவாக்கர் ''சிஏஏக்கு எதிரான விவேகானந்தர், என்.ஆர்.சிக்கு எதிரான விவேகானந்தர் மற்றும் இந்துத்துவாவுக்கு எதிரான விவேகானந்தர்" என்ற ஹேஷ்டேக்கை இணைத்ததைப் பற்றி பலரும் கிண்டலடித்ததால் அவர் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.
தன் பின் "இது தவறுதலாக நடந்துவிட்டது என்பதை மூலம் ஒப்புக்கொள்கிறேன். விவேகானந்தர் உரையின் உள்ளடக்களோடு மட்டும் நிற்கவும்'' என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.