காஷ்மீர் எல்லைப் பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
காஷ்மீர் எல்லையில் புல்வாமா மாவட்டத்தின் டிராவல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதல் இன்று அதிகாலை தொடங்கியது.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே இன்று காலை தொடங்கி தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் தற்போதை நிலவரப்படி 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன. அவர்கள் யார் என்ற அடையாளம் உறுதி செய்யப்படும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.