இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவி லான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 9ம் தேதி, இரு நாடுகளின் எல்லைக் காவல் படை தலைவர்களின் சந்திப்பு டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த சந்திப்புக்கு இந்திய எல்லைக் காவல் படையும், பாகிஸ்தானின் பாகிஸ்தான் ரேஞ்சர் படையும் ஒப்புக்கொண் டுள்ளன. இந்த சந்திப்பு செப்டம்பர் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பின் போது, எல்லையில் தொடர்ந்து நடை பெறும் போர் நிறுத்த அத்துமீறல் கள், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுதல், போலி இந்திய ரூபாய் நோட்டுகள் எல்லை வழியே கடத்தப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை இந்தியா எழுப்ப உள்ளது.