தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் வரிசையில் உத்தரா கண்ட்டில் மலிவு விலை உணவகத்தை அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இந்திரா அம்மா உணவுத் திட்டம் என்ற பெயரிலான புதிய திட்டத்தின் கீழ் தலைநகர் டேராடூனில் ஒரு வணிக வளாகத்தில் சுதந்திர தினத்தன்று இந்த உணவகம் திறக்கப்பட்டது. இங்கு ரூ.20-க்கு 4 சப்பாத்தி, பருப்பு குருமா, சாதம், காய்கறிகள், குழம்பு மற்றும் ஊறுகாய் வழங்கப்பட்டது.
உணவகத்தை தொடங்கி வைத்த ஹரீஷ் ராவத், பிறகு சாப்பிட வந்தவர்களுக்கு தனது மனைவி ரேணுகாவுடன் சேர்ந்து உணவு பரிமாறினார்.