ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்து வெள்ளை புலி ஒன்று நேற்று மாலை தப்பியது. இதனை அறிந்த பொதுமக்கள் பெரும் பீதிக் குள்ளாயினர். பின்னர் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மீண்டும் புலி கூண்டில் அடைக்கப்பட்டது.
ஹைதராபாதில் பிரசித்தி பெற்ற நேரு உயிரியல் பூங்காவில் நேற்று மாலை வெள்ளை புலியை வேறு இடத்திற்கு மாற்ற அதன் கூண்டை ஊழியர்கள் திறந்தனர். அப்போது திடீரென அந்த புலி கூண்டிலிருந்து தப்பி ஓடியது.
இதனை அறிந்த பொது மக்கள் பீதி அடைந்தனர். உடனடி யாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாதவாறு, பூங்காவில் இருந்து பொதுமக்கள் அனை வரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் புலியை கண்டுபிடித்து அதற்கு மயக்க மருந்து கொடுத்து பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.