இந்திய கலாச்சாரத்துக்கு யேசுதாஸ் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது என அவரது 80-வது பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் தனது 80-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் இந்த சமயத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இசை கலந்த குரல் நாட்டின் அனைத்து தரப்பு, பல வயது மக்களையும் ஈர்க்கும்.
இந்திய கலாச்சாரத்துக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.