இந்தியா

ஜே.என்.யு வன்முறை: நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் உள்துறை செயலர், டெல்லி போலீஸ் கமிஷனர் 13ம் தேதி ஆஜர் 

பிடிஐ

மத்திய உள்துறைச் செயல்ர் அஜய் குமார் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்ய பட்னாயக் ஆகியோர் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஜனவரி 13ம் தேதி ஆஜராகின்றனர்.

அதாவது டெல்லியில் அதிகரிக்கும் குற்றங்கள் மற்றும் ஜேஎன்யு வன்முறை விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

நிலைக்குழுவுக்குத் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா செயல்படுகிறார். இவர்களிடம் ஜே.என்.யு விவகாரமும் விளக்கம் கேட்கப்படவுள்ளது

ஜே.என்.யு வளாகத்துக்குள் முகமூடியிட்ட குண்டர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கடுமையான ஆயுதகங்களினால் தாக்கினர், இதில் ஏகப்பட்ட பேர் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதலின் போது போலீஸ் எதுவும் செய்யாமல் வாளாவிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உள்துறை செயலர் பல்லா முன்பு சிஏஏ-வுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து வடகிழக்குப் பகுதிகளின் நிலைமைகளை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கினார்.

மேலும் 370-ம் பிரிவு நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் நிலவரங்களியும் நிலைக்குழு முன் விளக்கினார் பல்லா.

SCROLL FOR NEXT