பிரான்ஸ், மங்கோலியா, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங் களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது
இந்தியா பிரான்ஸ் இடையே மக்கள் தொடர்புகளை அதிகரிக்க வும் மாணவர்கள், கல்வியாளர் கள் மற்றும் ஆய்வாளர்கள் பய ணத்தை அதிகரிக்கவும் வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த 2018, மார்ச் மாதம் கையெழுத் தானது. தொடக்கத்தில் 7 ஆண்டு கள் வரை செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் அதி பரின் இந்தியப் பயணத்தில் கையெழுத்தானது.
இதுபோல், அமைதி மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கான விண் வெளி திட்டங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப் பந்தம் மங்கோலிய அதிபருடன் டெல்லியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கையெழுத்தானது.
துருவப் பகுதி ஆய்வில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந் துணர்வு ஒப்பந்தம் ஸ்வீடன் நாட்டு டன் கடந்த டிசம்பர் 2-ம் தேதி கையெழுத்தானது. எரிசக்தி தேவையில் இந்திய ரயில்வே தற்சார்பு அடைவது தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் பிரிட்டனு டன் கடந்த டிசம்பரில் கையெழுத் தானது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்ச ரவை கூட்டம் நேற்று நடைபெற் றது. இதில் இந்த ஒப்பந்தங்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.சுகாதாரத் துறை ஒத்துழைப்பு தொடர்பாக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கடந்த 2019 நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.