என். மகேஷ்குமார்
என் மீதான கோபத்தை அமராவதி மக்கள் மீது காட்ட வேண்டாம் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆந்திராவுக்கு அமராவதிதான் தலைநகராக இருக்க வேண்டும் எனக் கூறி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராம் மோகன் ரெட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 20 நாட்களாக பெண்கள், விவசாயிகள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமராவதிக்கு நேற்று முன்தினம் வந்த சந்திரபாபு நாயுடு இதுகுறித்து பேசியதாவது:
ஆந்திராவின் எதிர்கால சந்ததியினர் வேலைவாய்ப்புக்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அமராவதியை தலைநகரமாக தேர்வு செய்தோம். இது மாநிலத் தின் மையப்பகுதியாகும்.
ஆனால், தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, என் மீதுள்ள கோபத்தால், அமராவதி மக்களை பழி வாங்குகிறார். என் மீதான கோபத்தை அமராவதி யிடம் காட்ட வேண்டாம்.
அமராவதியில் இப்போதே அனைத்து கட்டிடங்களும் உள்ளன. புதிதாக எதையும் கட்ட மைக்க தேவையில்லை. ஆனால், கமிட்டிகளை அமைத்து ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி மக் களை ஏமாற்ற பார்க்கிறார். மாநிலத் தில் உள்ள பெரும்பாலான மக் கள் அமராவதியே தலைநகரமாக இருக்க வேண்டும் என விரும்பு கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.