இந்தியா

ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

ஜேஎன்யுவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த நபர்கள் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.

இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியுள்ளது என்று நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு ஜேஎன்யு மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெர்வித்தனர்.

சென்னை ஐஐடியிலும் ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT