இந்தியா

படகு மீது மின்னல் தாக்கி 7 பேர் பலி

செய்திப்பிரிவு

அசாம் மாநிலத்தில் படகு மீது மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர்.

அசாமின் பார்பேட்டா மாவட்டம், மிலன் பஜார் பகுதிக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை பெக்கி நதியில் பலர் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் படகு மீது மின்னல் தாக்கியதில் 3 குழந்தை கள், 1 பெண் உட்பட 7 பேர் உயிரிழந்த னர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பார்பேட்டா மாவட்டத்தின் கொகல்மாரி, சான்ட்ரா ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த அனைவரும் பார்பேட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பின்னர் குவாஹாட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

SCROLL FOR NEXT