அப்துல் சத்தார் 
இந்தியா

சிவசேனா அமைச்சர் விலகலா? - சஞ்சய் ராவத் மறுப்பு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் சிவசேனா சார்பில் அமைச்சராக உள்ள அப்துல் சத்தார் பதவ விலகியதாக வெளியான தகவலை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நீண்ட இழுபறிக்கு பின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கூட்டணி ஆட்சி அமைந்தது. அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. சிவசேனாவைச் சேர்ந்த எம்எல்ஏ அப்துல்சத்தார் இணையமைச்சராக பதவி ஏற்றார். அவர் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசனோவில் இணைந்தவர். அவர் கேட்ட துறை வழங்கப்படவில்லை என அதிருப்தி அடைந்ததாகவும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியானது.

சஞ்சய் ராவத்

ஆனால் இந்த தகவலை சிவசேனா மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘இந்த தகவலில் உண்மையில்லை. அவர் எந்த அதிருப்தியும் கொள்ளவில்லை. சிவசேனா தலைமையிலான ஆட்சியை வீழ்த்த பாஜக செய்யும் சதி இது.’’ எனக் கூறினார்.
இதனிடையே அப்துல் சத்தாரை சமாதானம் செய்ய சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே மூத்த தலைவர்கள் இருவரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT