இந்தியா

அனைத்து மாநிலங்களிலிருந்தும் வேலைக்கு ஆட்கள் தேர்வு: அறிவிக்கையை வாபஸ் பெற்ற ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டபின், முதல்முறையாக 33 பணியிடங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம் செய்யப்பட்டது, ஆனால் அந்த அறிவிக்கையை திரும்பப் பெற்றது ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்.

ஜம்மு காஷ்மீர் மாவட்ட நீதிமன்றங்களில் ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சு பணியாளர், ஓட்டுநர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட 33 பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் சஞ்சய் தார் இந்த விளம்பரத்தைக் கடந்த 26-ம் தேதி அளித்துள்ளார், 2020 ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கலாம் என்று விளம்பரம் செய்திருந்தது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிவிக்கையை வாபஸ் பெற்றதையடுத்து தற்போது “ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்காக கடந்த 26ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுகிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது என்பதற்குக் காரணம் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் இந்த பல மாநிலங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் தேசிய மாநாடு, ஜேகேஎன்பிபி, இடது சாரிக்கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரிடமிருந்து உரத்த குரலில் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இக்கட்சிகள் வலியுறுத்தின.

ஜம்மு காஷ்மீர் உள்ளூர் மக்களுக்கு அரசு வேலை பற்றிய கேள்விக்கு நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சல் கூறும்போது, “இது குறித்து பலதரப்பட்ட ஆலோசனைகள் அரசுக்கு வந்து கொண்டிருக்கின்றன, இவற்றை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT