இந்தியா

ஆபாச இணையதள தடை திடீர் நீக்கம்

பிடிஐ

857 ஆபாச இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திடீரென நீக்கியுள்ளது. குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச பட வலைதளங்களுக்கு மட்டும் தடை நீடிக்கிறது.

கடந்த 31-ம் தேதி மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் 857 ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆபாச இணையதளங்களுக்கு விதிக் கப்பட்ட தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவகாரம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்க மளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT