பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

குடியுரிமைச்சட்டம், என்சிஆருக்கு எதிராக இடதுசாரிகள் 7 நாட்கள் நாடுதழுவிய போராட்டம்;8-ம் தேதி வேலைநிறுத்தம்

பிடிஐ

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், என்சிஆர், என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை நாடு தழுவிய போராட்டமும், 8-ம் தேதி வேலைநிறுத்தமும் நடத்தப்போவதாக இடதுசாரி கட்சிகள்
அறிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், பார்வேர்ட் பிளாக், புரட்சிகர சோசலிச கட்சி ஆகிய இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், என்சிஆர், என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை நாடு தழுவிய போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், பார்வேர்ட் பிளாக், புரட்சிகர சோசலிச கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. 8-ம தேதி தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் பொது வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்து விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் அமைப்புகளிடமும், சிவில் சமூக அமைப்புகளிடமும் ஆதரவு கோரியுள்ளோம்.

இந்தி்ய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, என்பிஆர் ஆகியவற்றின் மூலம் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக ஜனவரி 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இடதுசாரிகள் தங்கள் தொண்டர்களுடன் போராட்டம் நடத்தும். இந்த போராட்டம் அனைத்தும் அமைதியான முறையில் நடைபெறும்

பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், திரிபுரா, மற்றும் டெல்லி ஆகியவற்றில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீஸார் மூலம் அடக்குமுறைகளை ஏவி தாக்குதல் நடத்தியதை இடதுசாரிகள் கண்டிக்கின்றன.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT