தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஜம்முவில் இருந்து நேற்று 38 யாத்ரீகர்கள் புறப்பட்டுச் சென்றனர். இத்துடன் இதுவரை 3.48 லட்சம் பேர் அமர்நாத் ெசன்றுள்ளனர்.
28 ஆண்கள், 9 பெண்கள், 1 குழந்தை ஆகியோர் கொண்ட இக்குழுவினர், ஜம்மு பகவதி நகர் முகாமில் இருந்து நேற்று அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட இவர்கள் நேற்று மாலை பஹல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களை அடைந்தனர்.
ஜம்மு முகாமில் இருந்து நேற்றுடன் 48,477 யாத்ரீகர்கள் அமர்நாத் சென்றுள்ளனர். அமர்நாத் குகைக் கோயிலில் இந்த ஆண்டு நேற்று முன்தினம் வரை 48,477 பேர் சிவனை வழிபட்டுள்ளனர்.