மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருவுருவச் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் முதுமை, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், மக்கள் தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட அவரது பிறந்தநாள் நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.
வாஜ்பாய் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியின் எம்.பி.யாக நீண்டகாலம் பதவி வகித்ததார். இதையடுத்து அவருக்கு அங்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது. சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தசிலையை பிரதமர் மோடி நாளை லக்னோவில் திறந்து வைக்கிறார்.
உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாஜக மூத்த தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.