பிரதமர் மோடி தவிர ராஜ்நாத் சிங், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா, மேனகா காந்தி ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் இருந்த வெற்றி பெற்றவர்கள். இவர்கள் கேபினட் அமைச்சர்களாகியுள்ளனர்.
தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணையமைச்சராகியுள்ள முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங், சந்தோஷ் கங்கார் ஆகியோரும் உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற வர்கள். மத வன்முறை ஏற்பட்ட முஷாபர்நகரில் வெற்றி பெற்ற சஞ்சீவ் குமார் பாலியான் இணையமைச்சராகியுள்ளார். காஜிபூர் எம்.பி. மனோஜ் சின்காவும் இணையமைச்சராகியுள்ளார். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வென்றவர்களில் 8 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரத்தில் இருந்து 6 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இருந்து வென்றவர்களில் நிதின் கட்கரி, கோபிநாத் முண்டே, அனந்த் கீத் (சிவசேனை), ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகியுள்ளனர். பிரகாஷ் ஜவதேகர், பியூஸ் கோயல் ஆகியோர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள். ராவ் சாஹிப் தன்வே இணையமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக பிஹார், மத்தியப் பிரதேசம், கர்நாடகத்தில் இருந்து வென்றவர்களில் தலா 4 பேரும் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.