இந்தியா

உத்தரபிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் குடியுரிமை சட்டம் பற்றி விளக்கிய ஐபிஎஸ் அதிகாரி: ட்விட்டரில் வேகமாக பரவும் வீடியோ பதிவு 

ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மத்தியில், ஒரு ஐபிஎஸ் அதிகாரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருவதுடன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் பல் வேறு பகுதிகளிலும் போராட்டம் தொடர்கிறது. எட்டாவா நகரிலும் போராட்டம் நடத்துவதற்காக பொது மக்கள் திரண்டிருந்தனர். இதைத் தடுப்பதற்காக, எட்டாவா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சந்தோஷ் மிஸ்ரா அங்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு கூடியிருந்த சில இளைஞர்கள் குடியுரிமை சட்டம் குறித்த சந்தேகங்களை எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட எஸ்எஸ்பி சந்தோஷ் மிஸ்ரா, அவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகை யில் சிரித்தபடி விளக்கம் அளித்தார். மேலும் அந்த இளைஞர்களின் தோள் மீது அன்புடன் கைப் போட்டுக்கொண்டு மிஸ்ரா விளக்கம் அளித்த முறை அனைவரையும் கவர்ந்தது.

இந்த வீடியோவில் சந்தேஷ் மிஸ்ரா பேசும்போது, “புதிய குடியுரிமை சட்டத்தின்படி நம்மை வெளியேற்றி விடுவார்கள்? அதன் பிறகு நாம் எங்கே போவது? என்ற சந்தேகம் எல்லாம் தேவை யில்லாதது. இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் வதந்தி. நீங்கள் பயிலும் கல்வியும் நிறுத் தப்படும் என யார் சொன்னது? இவற்றை நம்பாதீர்கள். அனை வரும் இங்கேயே இருந்து கல்வி பயின்று எங்களைப் போல காவல் துறையிலும் சேர்ந்து பணி யாற்றலாம்.

இந்த சட்டம், பிறநாடுகளில் இருந்து அகதிகளாக குடியேறி யவர்களுக்கானது. ஏற்கெனவே இங்கு குடியிருந்து வருபவர்களுக் கும் இந்த சட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித் தார். சந்தோஷ் மிஸ்ராவின் இந்த வீடியோவுக்கு ‘உண்மையான பாது காவலன்..’, ‘இதுபோன்ற அதிகா ரிக்கு ஒரு சல்யூட்..’ என பாராட்டு கருத்துகள் குவிகின்றன.

SCROLL FOR NEXT