அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் அர்ச்சகராக தலித் பிரிவைச் சேர்ந்தவரை நியமிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் விரும்புகிறது. மேலும் அரசு கொடுக்கும் பணத்தில் அல்லாமல் சமூகம் கொடுக்கும் பணத்திலிருந்து ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் விஎச்பி தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற அயோத்தி தீர்ப்பின் படி ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அறக்கட்டளை மூலமே அர்ச்ச்கரும் நியமிக்கப்படுவார்.
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் பேசிய விஎச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சல், “அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும். இதில் விஎச்பி தலையிடாது. இருப்பினும் தலித் அர்ச்சகரை நியமிப்பது வரவேற்கத்தக்கது ஆகும். விஎச்பி சில காலங்களாக தலித் அர்ச்சகர்களைத் தயார்படுத்தி வருகிறது. தர்மாச்சாரிய தொடர்புத் துறை மற்ரும் அர்ச்சக புரோகிதத் துறை மூலம் தலித் அர்ச்சகர்களை தயார்படுத்தி வருகிறது. எஸ்.சி. பிரிவினர் அர்ச்சகராகவருவதற்கு பயிற்சியளிக்க விஎச்பி ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது” என்றார்.
ராமர் கோயில் இயக்கத்துடன் தலித் பிரிவினரை இணைத்துக் கொள்ள விஎச்பி முயற்சி செய்து வருகிறது. நவ.9, 1989-ல் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை காமேஷ்வர் சவ்பால் நாட்டினார். இவர் பிஹாரைச் சேர்ந்த தலித் கட்சி தொண்டர் ஆவார். இதன் மூலம் விஎச்பி ராமர் கோயில் மூலம் ஒட்டு மொத்த இந்து சமூகத்தையும் இணைக்கிறது என்ற செய்தியை வி.எச்.பி அறிவித்துள்ளதாக வினோத் பன்சல் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு ராமர் கோயிலுக்காக பிப்.9, 2020க்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும்.
“வி.எச்.இ. ராமர் கோயில் இயக்கத்தை வெற்றியடையச் செய்துள்ளது. கோயிலுக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது உச்ச நீதிமன்றம் இது பகவான் ராமரின் அருளினால்தான், அரசு இப்போது அறக்கட்டளை அமைக்க வேண்டு. அது நல்ல முறையில் செயல்பட வேண்டும். அரசு இதில் முனைப்புடன் உள்ளது, எனவே அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய முடிவை அரசு எடுக்கும்” என்றார் வினோத் பன்சல்