டெல்லியில் ஜும்மா மசூதி அருகில் நேற்று குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து பீம் சேனா தலைவர் சந்திர சேகர் ஆசாத் உள்ளிட்ட 40 பேரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இதனைக் கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் அரசியல்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லியில் ஜும்மா மசூதி அருகில் பீம் சேனா தலைவர் சந்திர சேகர் ஆசாத் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கிருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது சந்திரசேகர் ஆசாத்தை போலீஸார் கைது செய்தனர். அவரது ஆதர வாளர்கள் உதவியுடன் போலீஸ் பிடியில் இருந்து அவர் தப்பினார். தீவிர தேடுதலுக்குப் பிறகு போலீ ஸார் மீண்டும் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப் பட்டார்.
பேரணியின்போது போலீஸ் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறி செல்ல முயன்றனர். டெல்லி கேட் பகுதியில் அவர் களை போலீஸார் தடுத்து நிறுத் தினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சியடித்தனர். டெல்லி தார்யாகன்ஜ் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.
வன்முறையைக் கட்டுப்படுத்த பழைய டெல்லி, நொய்டாவில் 144 தடை உத்தரவு அமல் செய்யப் பட்டுள்ளது. ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் டெல்லி நகரம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சவுரி பஜார், லால் குயிலா, ஜும்மா மசூதி, டெல்லி கேட், ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மூடப்பட்டன.
இந்தநிலையில் டெல்லியில் ஜும்மா மசூதி அருகில் நேற்று குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து பீம் சேனா தலைவர் சந்திர சேகர் ஆசாத் உள்ளிட்ட 40 பேரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.