இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

பிடிஐ

வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நேற்று பாது காப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் பார முல்லா மாவட்டம், உரி செக்டார், காசிநாக் தார் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காலை 7 மணியளவில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT