இந்தியா

‘‘என் மகளுக்கு அரசியல் தெரியாது; அவரை விட்டு விடுங்கள்’’ - குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு; கங்குலி விளக்கம்

செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்தத் சட்டத்துக்கு எதிரான சனா கங்குலியின் இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து தனது மகளுக்கு இந்திய அரசியலை பற்றி ஏதும் தெரியாது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்தின் ஒப்புதலில் சட்டமாக மாறியது.

இந்த நிலையில் குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிசிசிஐயின் தலைவருமான கங்குலியின் மகள் சனா கங்குலி பிரபல இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின், ’தி எண்ட் ஆப் இந்தியா’ என்ற புத்தகத்தில் குறிப்பபிடப்பட்டுள்ள சில வரிகள் அடங்கிய பக்கத்தை பதிவிட்டு குடியிரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தனது நிலைப்பாட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் சனாவின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் சனா கங்குலியின் பதிவுக்கு விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்த விவகாரத்திலிருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியலை பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.


கங்குலி விளக்கம் அளித்துள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அப்பதிவை சனா கங்குலி நீக்கியுள்ளார்.

SCROLL FOR NEXT