இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் கலவர பகுதிகளுக்கு சென்ற 2 பாஜக எம்.பி.க்கள் கைது

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற பாஜக எம்.பி.க்கள் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், பாஜக எம்.பி.க்களான நிஷித் பிராமனிக் மற்றும் காகென் முர்மு தலைமையில் அக்கட்சியினர், மால்டா மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதுடன், 2 எம்.பி.க்களையும் கைது செய்தனர்.

இதுபோல, பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா மற்றும் அக்கட்சி எம்.பி. சவுமித்ரா கான் தலைமையிலான குழு, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்றது. அவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் கலவரம் பரவுவதைத் தடுப்பதற்காகவே பாஜக தலைவர்களை தடுத்து நிறுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். - பிடிஐ

SCROLL FOR NEXT