இந்தியாவில் இந்த ஆண்டு 41 புலிகள் இறந்திருப்பதாக காட்டுயிர் பாதுகாப்பு நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் புலிகளின் எண் ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியானது. 2010ம் ஆண்டு 1,706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2014ம் ஆண்டு 2,226 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்போது வரை நாடு முழுக்க 41 புலிகள் இறந்திருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் வன உயிர் கடத்தலைத் தடுக்கும் 'டிராஃபிக்' ஆகிய அமைப்புகள் இந்த ஆண்டு இதுவரை 7 புலிகள் மட்டுமே இறந்திருப்பதாகக் கூறுகின்றன. கடந்த ஆண்டு 66 புலிகள் இறந்தன. இவற்றுக்கு முக்கியக் காரணங்களாக, கள்ள வேட் டையும், புலிகளின் வாழிடம் குறைந்து வருவதும் சுட்டிக் காட்டப்பட்டன.
"நமது காடுகளைச் சுற்றியுள்ள இடைப்பகுதி (பஃபர் சோன்) வேகமாக அழிந்து வருகிறது. புலிகள் பாதுகாப்பில் இது மிகவும் கவலையளிக்கும் விஷயம்" என்று 'டிராஃபிக்' அமைப்பின் தலைவர் சேகர் நீரஜ் கூறியுள்ளார்.
மேலும் அவர், "காடுகளில் மான்கள், காட்டுப் பன்றிகள் மற்றும் இதர சிறிய உயிரினங்கள் ஆகியவற்றின் இருப்பு குறைந்து வருவதாலும், இடைப்பகுதி சுருங்கி வருவதாலும் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் புலிகள் பிரவேசிக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன" என்றார்.
உலகில் உள்ள 3,200 புலிகளில் நான்கில் மூன்று பங்கு புலிகள் இந்தியாவில் இருக்கின்றன என் பதால், இந்தியாவின் புலிகள் பாதுகாப்பை சர்வதேச அரசுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக் கின்றன.
இதற்கிடையே புலிகளைப் பாதுகாக்க, பிரபலங்களைப் பயன்படுத்த இந்திய அரசு திட்ட மிட்டுள்ளது. அதன் ஒரு பகுதி யாக, புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சமீபத்தில் மகாராஷ்டிர மாநில அரசு பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனை மாநில புலிகள் பாதுகாப்பு தூதராக நியமித் துள்ளது குறிப்பிடத்தக்கது.