இந்தியா

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜக-சிவசேனா உறுப்பினர்கள் இடையே கைகலப்பு

பிடிஐ

பருவமழை தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்யக்கோரிய வாசக பேனர்களுடன் பாஜக உறுப்பினர்கள் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வருகை தந்ததையடுத்து பாஜக-சிவசேனா உறுப்பினர்களிடையே சிறு மோதல் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25,000 இழப்பீடு கேட்டு சிவசேனா தன் கட்சி இதழான சாம்னாவில் எழுதியது. இந்த வாசகங்களைக் குறிப்பிட்டு பாஜக தொண்டர்கள் சட்டப்பேரவையில் வாசக பேனர்களுடன் வந்தனர்.

பாஜக தலைமை முந்தைய அரசு விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,000 கோடி அறிவித்த போது இந்தத் தொகை போதாது என்று சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.

பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் சில பாஜக உறுப்பினர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் அந்தப் பேனரை காட்டி கோஷம் எழுப்பினார்கள்.

பாஜக உறுப்பினர்கள் கொண்டு வந்த இந்த பேனரை சிவசேனா உறுப்பினர்கள் பறிக்க முயன்றதால் சிறு கைகலப்பு ஏற்பட்டது. சேனாவின் பாஸ்கர் ஜாதவ், பாஜகவின் ஆஷிஷ் ஷெலார் ஆகியோர் கைகலப்பை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதனையடுத்து அவை 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது பெரும் கூச்சல்கள் எழவே சபாநாயகர் அவையை நாள் முழுதும் நடைபெறாது என்று அறிவித்தார்.

SCROLL FOR NEXT