அமித் ஷா 
இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் போல பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வியூக நிபுணரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியில் உள்ளது. தேசிய குடியுரிமை மசோதாவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனததளம் வாக்களித்தது. இதற்கு பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக பிரசாந்த் கிஷோருக்கு ஐக்கிய ஜனதாதளத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் நிதிஷ்குமாரை பிரசாந்த கிஷோர் சந்தித்துப் பேசினார். பின்னர், தான் திறந்த மனதோடு தெரிவிக்கும் கருத்துக்கள் பற்றி கட்சியில் சிலர் செய்யும் விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம் என நிதிஷ் குமர் தன்னை கேட்டுக் கொண்டதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இந்நிலையில், ட்விட்டரில் பிரசாந்த் கிஷோர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சமமானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளும் நலிந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த அனுபவம் நமக்குத் தெரியும். அதேபோன்ற பாதிப்பு தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால் மக்களுக்கு ஏற்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT