இந்தியா

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: காங்கிரஸ் அரசு மீது தமிழகம் குற்றச்சாட்டு

பிடிஐ

ராஜீவ் கொலையாளிகளை காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏன் தூக்கிலிடவில்லை? என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேள்வியெழுப்பியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான நீதிபதிகள் எப் எம் ஐ கலிபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சப்ரே, யு.யு. லலித் ஆகியோரடங்கிய அரசியல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி வாதிட்டதாவது: ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்தது. இது அரசியல், ஏதேச்சதிகாரம் மற்றும் திடீரென எடுக்கப்பட்ட முடிவு என தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

அனைத்து அரசியல் கட்சி களுமே அவர்களை தூக்கிலிட வேண்டாம் என்றுதான் கூறு கின்றன. மக்கள், அனைத்து எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்துத் தரப்பும் தூக்கிலிடுவதை எதிர்க்கின்றன. எவ்வித ஆட்சேபணையும் இல்லாத போது எப்படி புறக் கணிக்க முடியும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 1 மற்றும் 2 தனது 10 ஆண்டு கால ஆட்சியின்போது ஏன் அவர் களைத் தூக்கிலிடவில்லை. அது தானே அவர்களின் தண்டனைக் குறைப்புக்குக் காரணம்.

அந்த 7 பேரின் கருணை மனு மீது, 2000-2012-ம் ஆண்டுவரை எவ்வித முடிவும் எடுக்காத மத்திய அரசு, மாநில அரசு மீது குற்றம் சாட்டக்கூடாது. நீங்கள் கேட்கிறீர்கள், கருணை மனுக்களை பரிசீலிக்கிறீர்கள், பின் அவர்களைத் தூக்கிலிடவில்லை. எனவே, நீங்கள் கருணை மிக்கவர். ஆனால் நாங்கள் இதனைச் செய்தால் அது தான்தோன்றித்தனமான மற்றும் எதேச்சதிகாரமான முடிவு என குற்றம்சாட்டப்படுகிறது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

SCROLL FOR NEXT