அசாம் மாநிலம் குவாஹாட்டி யில் டிசம்பர் 15-17-ம் தேதி வரை நடைபெறவிருந்த இந்தியா ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு வருகை தருவதாக இருந்தார். ஆனால், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வாஹாட்டியில் போராட்டம் நடைபெற்று வருவ தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட் டது.
இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இது குறித்து கூறுபோது, “இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு தரப்பிலும் ஒருமன தாக மாநாட்டின் தேதியைத் தள்ளிவைக்க தீர்மானம் எடுக் கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்தாண்டு இம்மாநாடு ஜப்பானில் உள்ள யாமனாஷி நகரில் நடைபெற்றது. அப்போது இந்தியா-ஜப்பானுக்கு இடை யிலான இருதரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.