போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளிட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு அதனடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இதில் உலக அளவில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் கிறிஸ்டியன் லாகர்டே 2-வது இடத்திலும், அமெரிக்க நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் நான்சி பெலோசி 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் இதுவரை இல்லாமல் முதன்முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார். இந்தபட்டியலில் அவர் 34-வது இடத்தில் உள்ளார்.
இவரை தவிர இந்தியாவில் இருந்து ஷிவ் நாடார் குழுமத்தைச் சேர்ந்த ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்திலும், பயோகான் நிறுவனத்தைச் சேர்ந்த மஜூம்தார் ஷா 65-வது இடத்தை பிடித்துள்ளார்.