இந்தியா

வாக்கு வங்கி அரசியலுக்காக பிரச்சினைகளை தள்ளிப்போட்ட காங்கிரஸ்: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக முக்கியப் பிரச்சினைகளில் முடிவெடுக்கவில்லை என பிரதமர் மோடி பேசினார்.

ஜார்க்கண்ட் மாநில தேர்தல்கள் 5 கட்டங்களாக நடைபெறுகின்றன. இன்று 3-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் நிலையில் மற்ற 2 கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு
இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

‘‘காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக முக்கியப் பிரச்சினைகளில் முடிவெடுக்கவில்லை. ஆனால் பாஜக வாக்கு வங்கி அரசியலை பற்றி கவலைப்படவில்லை. எப்போது மக்களின் நலனுக்காகவே நடவடிக்கை எடுக்கிறது.

ராமஜென்மபூமி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்தது. நாட்டின் நலன் என்பது அந்த கட்சிக்கு இரண்டாம் பட்சம் தான்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அந்த மாநில மக்கள் விரும்பினர். பல ஆண்டுகளாக அந்த கோரிக்கையை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. நாடுமுழுவதும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்று வருகிறோம்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT