மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ரத்தன் லால் கட்டாரியா : கோப்புப்படம் 
இந்தியா

தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையா? மத்திய அமைச்சர் பதில்

பிடிஐ

தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரும் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூகநலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ரத்தன் லால் கட்டாரியா பதில் அளித்துள்ளார்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரும் திட்டம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ரத்தன் லால் கட்டாரியா எழுத்துபூர்வமாக பதில் அளித்துப் பேசியது

" தனியார் துறையில், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறை கொண்டுவரும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. தனியார் துறையின் பிரதிநிதிகள் கருத்துப்படி, இட ஒதுக்கீடு முறை தீர்வாகாது. ஆனால், அரசுடனும், அரசு சார்ந்த நிறுவனங்களுடனும் இணைந்து செயலாற்ற விருப்பமாக இருக்கிறார்கள்.

இதன்படி, நடப்பு வேலைவாய்ப்பு கொள்கையில், விளிம்பு நிலையில் இருக்கும் எஸ்சி,எஸ்டி பிரிவினரை திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மேம்பாட்டு ஆகியவற்றில் சேர்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் வர வேண்டும்.

தொழில்துறை கூட்டமைப்புகள் தங்கள் உறுப்பினர்கள் நிறுவனம் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் கல்வி, மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி கிடைக்கும் வகையில் நெறிமுறைகளை வகுத்துள்ளனர்.

விளிம்புநிலையில் இருக்கும் பிரிவு தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவித் தொகை, கோடைகால பயிற்சி வகுப்புகள், தொழில்முனைவோர் திறன் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றன.

குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு எஸ்சி,எஸ்டி பிரிவினரை பணியில் அமர்த்த தனியார் துறை நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
இவ்வாறு அமைச்சர் ரத்தன்லால் தெரிவித்தார்

SCROLL FOR NEXT