இந்தியா

ஹிட்லர் வரிசையில் அமித் ஷா இடம் பெற்று விடுவார்: மக்களவையில் ஒவைசி கடும் சாடல்

செய்திப்பிரிவு

எதிர்காலத்தில் ஹிட்லர், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் டேவிட் பென் குரியன் வரிசையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயர் இடம் என ஒவைசி பேசினார்.

மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவது:

மதத்தை கொண்டு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படவில்லை. இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. அதன் காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என காங்கிரஸ் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

நாடு சுதந்திரமடைந்தபோது, மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ் கட்சி தான். நாங்கள் அல்ல. மதத்தின் பெயரால் நாங்கள் நாட்டை பிளவுபடுத்துவதாக கூறப்படுவதில் 0001 சதவீதம் கூட உண்மையில்லை. சட்டத்தின்படியே இதனை செய்கிறோம்.’’ எனக் கூறினார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது:
‘‘குடியுரிமை மசோதா போன்ற மிக மோசமான சட்டங்கள் கொண்டு வரப்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அவைக்கு உண்டு.

இஸ்ரேல் நாடு செயல்படுத்தும் குடியுரிமை மசோதா இந்த நாட்டுக்கு தேவையா. எதிர்காலத்தில் ஹிட்லர், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் டேவிட் பென் குரியன் வரிசையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயர் இடம் பெற்று விடும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT