மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் : கோப்புப்படம் 
இந்தியா

வேலைவாய்ப்பு குறைந்ததற்கு எந்தவிதமான காரணமும் இல்லை:மத்திய அமைச்சர் விளக்கம்

பிடிஐ

வேலைவாய்ப்பு குறைந்ததற்கான காரணம் எதுவும் இல்லை என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி கேள்வி எழுப்பினார். மேற்கு வங்கத்தின் செராம்பூர் தொகுதி எம்.பி.யான கல்யான் பானர்ஜி, பேசுகையில், " கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்னுடைய தொகுதியில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டார்கள். ஏராளமான தொழில்கள் மூடப்பட்டன. வேலைவாய்ப்பை அதிகப்படுத்த மத்திய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுத்தது " என்று கேட்டார்.

இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் பதில் அளித்தார். அவர் பேசுகையில், " வேலைவாய்ப்பு குறைந்ததற்கு எந்தவிதமான காரணத்தையும் தெரிவிக்க இயலாது. நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எந்த மாநிலத்துக்கும், நகருக்கும் சிறந்த வேலைக்காகவும், வசதிகளுக்காகவும் இடம் பெயர்ந்து செல்ல உரிமை இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் நாடுமுழுவதும் சுதந்திரமாகச் செல்ல அடிப்படை உரிமைகளை வழங்கி இருக்கிறது" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT