இந்தியா

கண்களுக்குப் புலப்படா இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம்: குடியுரிமை (திருத்த)  மசோதா குறித்து சிவசேனா கடும் தாக்கு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சிவசேனா அந்த மசோதாவை கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது இந்த மசோதா என்று விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக தங்கள் இதழான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியுரிமைத் திருத்த மசோதா என்ற பெயரில் வாக்கு வங்கி அரசியல் செய்வது நாட்டு நலன்களுக்கு உகந்ததாக இல்லை. நம் நாட்டில் ஏற்கெனவே பிரச்சினைகள் இல்லாதது போல் இன்னுமொரு பிரச்சினையாக இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மசோதா மூலம் இந்துக்கள் முஸ்லிம்கள் பிரிவினை வாதத்தை கண்களுக்குப் புலப்படா வகையில் ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

இந்துக்களுக்கு இந்துஸ்தான் இல்லாமல் வேறு நாடுகள் இல்லை என்பது உண்மைதான். சட்ட விரோதமாக குடியேறியவர்களில் இந்துக்களை மட்டும் குடிமக்களாக அங்கீகரித்தால் நாட்டில் மதப் போர் உருவாகி விடாதா?

வடகிழக்கு மாநிலங்களும் பிஹாரும் இந்த மசோதாவை எதிர்க்கிறது. மேற்கு வங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களின் சரியான எண்ணிக்கை முதலில் வெளியிடப்பட வேண்டும். இது லட்சக்கணக்கில் இருந்தால் இவர்கள் இந்தியாவில் எங்கு நிலையமர்த்தப்படுவார்கள்?

இவ்வாறு சிவசேனா தன் தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT