பிரதிநிதித்துவ படம். 
இந்தியா

கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல்- 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8.53 நிலவரப்படி பாஜக 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் 2 இடங்களிலும் ஜேடிஎஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ முக்கிய காரணகர்த்தாவாக இருந்த எம்.எல்.ஏ.க்கல் ராஜினாமா செய்ததையடுத்து இந்த இடைத்தேர்தல் டிச.5ம் தேதி நடைபெற்றது.

தற்போது ஆளும் எடியூரப்பா தலைமை பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற 7 இடங்களில் வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது.

பாஜகவுக்கு தற்போது 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், சுயேச்சை வேட்பாளரின் ஆதரவையும் சேர்த்தால் பாஜகவின் பலம் 106 ஆகும். காங்கிரஸ் 66 எம்.எல்.ஏக்களையும் ஜேடிஎஸ் 34 எம்.எல்.ஏ.க்களையும் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT