முதல்வர் ரகுபர்தாஸ் 
இந்தியா

ஜார்க்கண்ட்டில் 2-ம் கட்டத் தேர்தல்: 63.36 % வாக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் 63.36 வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 2-ம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்கிறன. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 இடங்களில் காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிடுகிறது. ஜே.எம்.எம் 43 மற்றும் ஆர்.ஜே.டி மற்ற ஏழு இடங்களிலும் போட்டியிடுகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவையொட்டி, மத்திய துணை ராணுவப் படை, போலீசார் உட்பட, 42 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றைய தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று நடைபெற்ற தேர்தலில், முதல்வர் ரகுபர்தாஸ், கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலும், சபாநாயகர் தினேஷ் ஓரான், சிசாய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மாநில பாஜக தலைவர், லஷ்மண் கிலா, சக்ரதார்புர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT