ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இதுபோன்ற தலிபான் மாதிரி காட்டுமிராண்டி நீதியை ஆதரித்தால் நீதிமன்றங்கள் தேவையில்லாமல் ஆகிவிடும் எனக் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘தெலங்கானாவில் நடந்த என்கவுன்ட்டர் குறித்து கொண்டாடும் மனப்போக்கு உள்ளது. கொடூரமாக ரத்தம் சிந்துதல் அல்லது செயல்பாடுகள் மூலம் தீ்ரவு காணுதல். தலிபான்கள் போல காட்டுமிராண்டித்தனமான நீதியா அல்லது நாகரீக சமூகத்தின் நீதியா என்ற கேள்வி உள்ளது. நீதிமன்றங்கள் தேவையில்லாமல் ஆகிவிடும்’’ எனக் கூறியுள்ளார்.