இந்தியா

நான் என்கவுன்டருக்கு எதிரானவன்: ஒவைசி கருத்து

செய்திப்பிரிவு

என்கவுன்டர்களுக்கு நான் எதிரானவன். யாரையும் என் கவுன்டர் செய்வதை ஏற்க முடியாது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான ஒவைசி கூறினார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான ஒவைசி கூறியதாவது:

‘‘பொதுவாகவே என்கவுன்டர்களுக்கு நான் எதிரானவன். யாரையும் என் கவுன்டர் செய்வதை ஏற்க முடியாது. காவல்துறையினருக்கு அந்த அதிகாரம் இல்லை. அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். என்கவுன்டர் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது கவலையை தெரிவித்து இருக்கிறது’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT