நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் உணவு பெறுவதை கைவிடுவது என எம்.பி.க்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் உணவு வழங்கப்படுவது குறித்து விவாதங்கள் எழுந்தன.
சாதாரண மக்களுக்கு கிடைக்காத உணவு எம்.பி.க்களுக்கு மிக மிக மலிவான விலையில் கிடைப்பதாக பல்வேறு தரப்பில் இருந்துகள் கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து கடந்தமுறை பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்தபோது அப்போதைய மக்களவைத் சபாநாயகர் சுமித்திர மகாஜன், நாடாளுமன்ற உணவகங்களில் விற்கப்படும் உணவுகள் விலையை நிர்ணயம் செய்ய ஒரு குழுவைஅமைத்தார்.
அந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று பல்வேறு உணவுகளின் விலையும் ஏற்றப்பட்டன.
இந்தநிலையில் நாடாளுமன்ற கேண்டீனில் மானிய விலையில் உணவு பெறுவதை கைவிடுவது என எம்.பி.க்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் ஓம் பிர்லா பல்வேறு கட்சி எம்.பி.க்களிடமும் கருத்துக் கேட்டதில் அவர்கள் அளித்த பதிலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதனை சபாநாயகர் அதிகாரபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை.