மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் தனியார் பேருந்து ஒன்று நிறுத்தியிருந்த லாரி மீது மோதியதில் 9 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
வியாழன் காலை 6 மணியளவில் சிதி என்ற ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து நிறுத்தியிருந்த லாரி மீது மோதியது, விபத்து நடந்த இடம் குத் சாலை ரேவா மாவட்டம், என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது வேகத்தினால் விளைந்த விபத்தல்ல பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலை தெரியாத காரணத்தினால் நிகழ்ந்த விபத்து என்று போலீஸார் முதற்கட்ட விசாரணையையடுத்து தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார், மேலும் காயமடைந்தோருக்கு அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.